3 August 2019, 11:57 AM


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IMD தகவலின் படி, இன்று அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கையும், பிற்பகல் 1.44 மணிக்கு 4.90 மீட்டர் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எந்தவொரு அவசர காலத்திலும் எங்களை 1916 இல் அழைக்கவும் ”என்று BMC ட்வீட் செய்தது.




மும்பையில் மீண்டும் கனமழை பெய்யத்துவங்கியுள்ள நிலையில், ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அவதி!!


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த நாட்களுக்குள் முன்பு பெய்த கனமழையில் பல இடங்கள் வெள்ளக்காடாகின. மழை மற்றும் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மும்பையில் சற்று இடைவெளி விட்டிருந்த மழை கடந்த இருதினங்களாக மீண்டும் துவங்கி பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் மழைநீர் தேங்கி மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


பால்கர் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் தேங்கியதில் சாலைகள், வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. இதையடுத்து அப்பகுதியிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கைலாஷ் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். அதே போல் இடைவிடாத கனமழையால் தானே மாநகராட்சியிலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே ராய்கட் அருகே போலாட்பூர் பகுதியில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, சாலையில் சரிந்துள்ள மண் போன்றவற்றை அகற்றும் பணிகள் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


மலாட் பகுதியில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால், வாகனங்கள் நீரில் மிதந்தபடி செல்கின்றன. ஜோகேஷ்வரி பகுதியிலுள்ள மேற்கு விரைவு சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்குள்ள சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது.


மழையால் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், மும்பை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தால், மும்பையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை அன்று தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில நேரங்களில் மிக தீவிர கனமழை பெய்யும் என்பதால் மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளிலும் கனமழையை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதனிடையே அடுத்த 4 முதல் 6 மணி நேரத்திற்கு வடக்கு கொங்கன் பகுதிகள், மும்பை, நவி மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் தீவிர கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.