மும்பையில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக மும்பையில் கனமழை கொட்டி வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
ரயில், பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. அது இன்று மதியம் குஜராத்தை நோக்கி சென்று அரபிக் கடலை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போகும்போது மிகவும் கனமழையுடன் ஒரு பிரளயத்தையே உண்டுசெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.