பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்தி சிதைப்பு
குற்றவாளியை மும்பை நீதிமன்றம் செப்டம்பர் 21 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 45 வயதான அந்த நபர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
மும்பை: டெல்லி நிர்பயா சம்பவம் போல மும்பையில் பாலியல் பலாத்காரம் சம்பவம் அரங்கேறியுள்ளது. 34 வயதான பெண்ணை முதலில் பாலியல் பலாத்காரம் செய்து, அவளது அந்தரங்க பகுதியில் இரும்பு ராடை செருகியுள்ளனர். அதன்பிறகு அந்த பெண்ணை சாலையில் வீசி சென்றுள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (சனிக்கிழமை) இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு சார்பில், "இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது மனிதாபிமானம் அற்ற மிருகத்தனமான செயல். இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதே பகுதியில் பணிபுரியும் பாதுகாவலர் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இரவு தனது சகோதரியின் வீட்டிற்கு செல்வதற்காக பாதிக்கப்பட்ட பெண் இரவு எட்டு மணிக்கு தனது வீட்டை விட்டு சென்றுள்ளார்.
தகவலின் படி, இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. மும்பையின் சாகினாகா பகுதியில் உள்ள கைரானி சாலையில் நடந்துள்ளது. இது டெல்லி நிர்பயா கற்பழிப்பு வழக்கின் சம்பவத்தை நினைவுப்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ALSO READ | பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா? 2021-ல் 46% அதிகரிப்பு; உ.பி முதலிடம்
சாகினகா பகுதியில் ஒரு டெம்போவுக்குள் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட பகுதியில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
கைராணி சாலையில் ஒரு பெண்ணை ஒரு ஆண் அடிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை மீட்டு மாநகராட்சி நிர்வாகம் நடத்தும் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகளும் முன்னுக்கு வந்துள்ளன என போலிஸ் அதிகாரி கூறினார்.
இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்ததோடு, இந்த வழக்கை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளியை மும்பை நீதிமன்றம் செப்டம்பர் 21 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 45 வயதான அந்த நபர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
ALSO READ | கொடூரத்தின் உச்சக்கட்டம்: பசுமாட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR