கொடூரத்தின் உச்சக்கட்டம்: பசுமாட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்!!

மத்திய பிரதேசத்தின் போபாலில், ஒரு மாடு 55 வயது நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 01:51 PM IST
  • மனிதன் மிருகத்தைக் காக்கும் நிலை போய், மனிதனிடமிருந்து மிருகம் காக்கப்படுமா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.
  • ஜூலை 4 ஆம் தேதி, சுந்தர் நகரில் 55 வயதான சபீர் அலி, பண்ணைக்கு சென்றார்.
  • முன்னதாக, கண்ணூரிலிருந்து இதே போன்ற ஒரு கொடூரமான வழக்கு பற்றி தெரியவந்தது.
கொடூரத்தின் உச்சக்கட்டம்: பசுமாட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்!! title=

போபால்: உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளிலும் மனிதனுக்கு மட்டும்தான் உணர்வுத்திறன் உள்ளது. ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு படைத்த மிருகங்களைக் காக்கும் உன்னத பொறுப்பைக் கொண்டுள்ளான். ஆனால், மாறி வரும் காலங்களில், மனிதன் மிருகத்தைக் காக்கும் நிலை போய், மனிதனிடமிருந்து மிருகம் காக்கப்படுமா என்ற கேள்வி எழத் தொடங்கியது.

உணவாக, வேட்டையாடப் படும் பொருளாக, அடிமையாக, அலங்காரப் பொருளாக, வாகனமாக என விலங்குகள் தொடர்ந்து மனிதனுக்கு பல உதவிகளை செய்து வருகின்றன. பல விதங்களில் விலங்குகளை பயன்படுத்திவரும் மனிதர்கள் சில சமயம் அனைத்து எல்லைகளையும் மீறி விடுகிறார்கள். போபாலில் நடந்துள்ள இந்த சம்பவம் அருவருப்பை உண்டுபண்ணுவதோடு, மனிதர்கள் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக்குகிறது.

ALSO READ: தில்லியில், தெரு நாய்களைக் காப்பாற்ற சென்றவர்கள் தாக்கப்பட்ட பரிதாபம்!!

மத்திய பிரதேசத்தின் போபாலில் (Bhopal), ஒரு மாடு 55 வயது நபர் (55 year old man) ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு (Rape) ஆளாக்கப்பட்டது. அப்பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

ஜூலை 4 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், அந்த நபர் சுந்தர் நகரில் உள்ள ஒரு பால் பண்ணைக்குச் சென்று ஒரு பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப் (Case) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

”ஜூலை 4 ஆம் தேதி, சுந்தர் நகரில் 55 வயதான சபீர் அலி, பண்ணையில் நுழைந்தபோது, பண்னையின் உரிமையாளர் ராம் யாதவ் அவரை நிறுத்தினார், ஆனால் பின்னர் அவரை செல்ல அனுமதித்தார். அடுத்த நாள், யாதவ் சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தபோது, அலி பசுவுடன் (Cow) இயற்கைக்கு மாறான உடலுறவை மேற்கொண்டது தெரிய வந்தது” என்று போபால் அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளரான அலோக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

யாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், சபீர் அலி மீது பிரிவு 377 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம், ஒரு மாட்டுத் தொழுவத்தில் இருந்த பல மாடுகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அயோத்தியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டார். ராஜ்குமார் நவாப்கஞ்சின் கோண்டாவில் வசிப்பவர் என்றும் அந்த மாட்டுத் தொழுவத்திற்கு அடிக்கடி வந்து செல்வார் என்பதும் பின்னர் தெரிய வந்தது.

தொழுவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சிலர் பார்த்தபோது, ராஜ்குமாரின் இந்த செயல் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து,அடுத்த முறை ராஜ்குமார் இந்த இழிவான செயலை செய்ய முற்பட்டபோது, தன்னார்வலர்கள் அவனை வளைத்துப் பிடித்தனர். ராஜ்குமாரை அடித்த அவர்கள் பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

2 மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சமர் கான் என்ற நபர் ஒரு மாடை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இம்மாதம் மார்ச் மாதம், கண்ணூரிலிருந்து இதே போன்ற ஒரு கொடூரமான வழக்கு பற்றி தெரியவந்தது. அங்கு 33 வயதான நபர் ஒருவர் ஒரு பசுவை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு அதை சித்திரவதை செய்து கொன்றார்.

மனித மனதால் இத்தனை கொடூரமாக சிந்திக்க முடியுமா? வாயில்லா ஜீவன் என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? இன்னும் சில காலங்களில் இந்த வக்கிரமே வாழ்க்கையாகிவிடுமா? உலகில் கொடூரமே கோலோச்சுமா? இப்படி பல கேள்விகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன.......

Trending News