Bomb Threat Hoax Call For RBI: இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பை நகரில் அமைந்தருக்கிறது. ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு நேற்று அழைத்த ஒருவர், ரிசர்வ் வங்கி தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கமாக, அடையாளம் தெரியாத நபர்கள், வதந்திகளை பரப்பும் பொருட்டு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களை விடுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றாலும், நேற்று ரிசர்வ் வங்கியின் சேவை எண்ணை தொடர்புகொண்ட அந்த நபர் தன்னை பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பாடலை பாடிய மர்ம நபர்


நேற்று காலை 11 மணியளவில் இந்த அழைப்பு மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வந்துள்ளது. அதில், ரிசர்வ் வங்கியை வெடிக்க வைத்து தரமட்டமாக்கப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் தெரிவித்திருக்கிறார். மேலும், தடைசெய்யப்பட்ட குழுவின் சிஇஓ என தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதற்கு முன் ஒரு பாடலை அவர் பாடியிருக்கிறார் என கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழைப்பு விடுத்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புச் சேர்ந்தவர்கள்தான் 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்கள். இந்தியாவில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அதுவும் ஒன்று எனலாம். நவ. 26ஆம் தேதி முதல் நவ. 29ஆம் தேதி வரை நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் 175 பேர் பலியானதாகவும், 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அந்த சம்பவம் நடந்த அதே நவம்பர் மாதத்தில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க | வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு! பைக்கிற்கு ரூ. 200 மட்டுமே அனுமதி!


தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்


முன்னர், கடந்த இரு மாதங்களாக விமான சேவை நிறுவனங்களுக்கு வந்த பல்வேறு வெடிகுண்டு மிரட்டல்களால், நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்கு ஆளாகின. இதனால், விமான சேவை நிறுவனங்களும், பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின. சமீபத்தில், அதாவது கடந்த வியாழக்கிழமை நாக்பூர் டூ கொல்கத்தா வரை செல்லும் IndiaGO விமானத்திற்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து ராய்ப்பூரில் அவசர அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் சோதனையிட்டத்தில் அது போலி குண்டுவெடிப்பு மிரட்டல் என்பதை அறிந்தனர். 


இதுபோன்ற செயல்களை தடுக்க அரசு தரப்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் எடுத்து செயலாற்றி வருகிறது. மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதலங்களில் பரப்பாதீர்கள் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது. இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் என்ற வதந்திகள் குடிமக்களை பாதிப்பது மட்டுமின்றி நாட்டின் பொருதாளதார பாதுகாப்பையும் சீர்குலைக்க வழிவகை செய்யும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருந்தது.


சென்னையிலும் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுவிக்கப்பட்டது. உடனே மாணவர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அனைத்தும் வதந்திகள் என தெரியவந்தது. இதுபோன்ற பிரச்னை சிரத்தை எடுத்து ஒடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. 



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ