போன ஜென்மத்ல நீ என் மனைவி என பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: 21 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் டாடா புற்றுநோய் மருத்துவமனையில் தன் தாயை அனுமதி போது அந்த ஆசிரியரை பார்த்தாக தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்ட இருவரும் நட்பாக பழகி வந்ததாகவும், இந்நிலையில் சம்பவத்தன்று தனியாக வீட்டிலிருக்கும் போது வந்த வெரோனிக்கா அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கடந்த ஜென்மத்தில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் கூறியுள்ள வெரோனிக்கா, தனது ஆசைக்கு இணங்கும்படியும் மாணவியை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.


இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டத்தை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல நம்பர்களிலிருந்து தொடர்ந்து வெரோனிக்கா மாணவிக்கு தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து வெரோனிக்காவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு ஆசிரியர் என்றும், போன ஜென்மத்தில் தானும் அந்த மாணவியும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெரோனிக்காவை கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வெரோனிக்கா பரோடி மீது பிரிவு எண் 452, (தவறான நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைதல்) 366 (கடத்தல் முயற்சி, திருமணம் செய்ய கட்டாயப்படுத்துதல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.