உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் நகரில், பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவரின் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி ஒன்றை நடத்திவந்தார்.  அதில், 19 வயதான பெண் ஒருவர் வரவேற்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த பெண், அங்கிருந்த கால்வாய் ஒன்றிலிருந்து நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, சொகுசு விடுதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு 'சிறப்பு சேவை' செய்யக் கோரி விடுதி உரிமையாளரான புல்கித் வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை அவர் கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பேஸ்புக் நண்பர் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தொடர்ந்து, முக்கிய பிரமுகர்களிடம் உடலுறவில் ஈடுபடும்படி புல்கித் ஆர்யா, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியதை போலீசார் உறுதிசெய்தனர். 


மேலும் படிக்க | தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்


தொடர்ந்து, பெண் கொலை வழக்கில், விடுதி உரிமையாளர் புல்கித் ஆர்யா, விடுதி மேலாளர் சௌரப் பாஸ்கர், உதவி மேலாளர் அன்கிட் குப்தா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கின் மேலும் பல ஆதாராங்கள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. உயிரிழந்த பெண்ணின் மெசேஜ்கள், வாட்ஸ்-அப் மெசேஜ் மற்றும் ஆடியோ பதிவுகள் அனைத்தும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 


குறிப்பாக, கொலை செய்யப்பட்ட பெண் தனது தோழியிடம், பணியிடம் குறித்து மெசேஜ் ஒன்றை செய்துள்ளார். அதில், "அவர்கள் என்னை பாலியல் தொழிலாளியாக மாற்றப்பாக்கிறார்கள்" என விடுதியில் நடக்கும் கொடுமை குறித்து பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி, மற்றொரு வாட்ஸ்-அப் ஆடியோவில்,விடுதிக்கு வரும் சிறப்பு பிரமுகர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு 'சிறப்பு சேவை' செய்ய எப்படியெல்லாம் அவர் வற்புறுத்தப்பட்டார் என்பது விளக்கியிருப்பார். இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய, போலீசார் தடயவியல் வல்லுநர்களிடம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே விடுதியில் வேலைப்பார்க்கும் பணியாளருடன், கொலை செய்யப்பட்ட பெண் பேசும் ஆடியோ பதிவும் சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது. அதில், அந்த பெண் கண்ணீர் குரலில், தனது கைப்பையை மேலே எடுத்துவரும் அவரிடம் கூறியது பதிவாகியிருந்தது.  மேலும், மசாஜ் என்ற பெயரில் அங்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு 'சிறப்பு சேவை' செய்ய ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுவது குறித்தும் ஒரு வாட்ஸ்-அப் உரையாடலின் ஸ்கிரின் ஷாட் புகைப்படமும் கிடைத்துள்ளது. 



இதன்மூலம், அந்த விடுதியில் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளான பெண், விரைவில் அங்கிருந்து விலக வேண்டும் என நினைத்து வந்ததும் தெரியவருகிறது. இந்த வழக்கு குறித்து பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி,'இதில் யார் ஈடுபட்டிருந்தாலும், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


மேலும், குற்றவாளியின் தந்தையான வினோத் ஆர்யா மற்றும் குற்றவாளியின் சகோதருமான அன்கித் ஆர்யா ஆகியோரை பாஜக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. சொகுசு விடுதியை பொதுமக்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். அரசு உத்தரவை அடுத்து அந்த சொகுசு விடுதி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | 'கூட்டு பாலியல் வன்புணர்வு' - ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக நடந்துசென்ற சிறுமி; 2 கி.மீ.,க்கு யாருமே உதவவில்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ