BJP-யின் வெற்றியை கொண்டாட தனது குழந்தைக்கு மோடி என பெயர் சூட்டிய தாய்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேச மாநில முஸ்லீம் பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார்.
பர்சப்பூர் மஹரூர் கிராமத்தில் மனேஸ் பேகம் என்ற பெண்ணுக்கு மே 23 அன்று ஆண் குழந்தை பிறந்தது. அன்று தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. மோடி தலைமையிலான அரசு அபார வெற்றியைப் பெற்றது. 


மோடியின் புகழைக் கண்டு தன் குழந்தைக்கு அவரின் பெயரையே வைக்க முடிவெடுத்தார். சுற்றியுள்ள உறவினர்கள் கூட அவரின் மனதை மாற்ற விரும்பினர் ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தார். துபாயில் பணி புரியும் அந்தப் பெண்ணின் கணவர் முக்தாக் அகமதுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் பேசி பார்த்துள்ளார். ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தத்தால் அந்த பெயரையே வைக்க முடிவெடுத்தனர்.



கிராமத்து பஞ்சாயத்து அதிகாரியிடம் குழந்தையின் பெயரை நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்ற பெயரையே வைக்க பதிவு செய்துள்ளனர். மனிஷ் பேகம் மோடி அரசு வழங்கிய இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கியது ஆகிய திட்டங்களை வெகுவாக பாராட்டினார். முத்தலாக் முறையை தடை செய்ததையும் பெருமையாக பேசினார். நாட்டிற்காக நல்ல வேலைகளை செய்கிறார் என்றும் புகழ்ந்தார். குழந்தைக்கு பெயர் வைப்பது அவர்களின் குடும்ப விவகாரம் அதில் யாரும் தலையிடமாட்டார்கள் என்று அந்தப் பெண்ணின் மாமனால் இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.