உத்திரபிரதேசத்தில் இந்து பெண் ஒருவரை திருமணம் செய்யதுக்கொள்ள முயன்ற இஸ்லாமிய வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் கைஜாபாத்தைச் சேர்ந்தவர் சாகில்(25), நொய்டாவில் பணிபுரிந்து வருகின்றார். இவர் ப்ரீத்தி சிங் என்னும் இந்து மத பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து நொய்டா நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துக்கொள்ள சென்றுள்ளனர்.


இந்நிலையில் சம்பவயிடத்திற்கு வந்த மனமகளின் குடும்பத்தார், சாகிலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் சிலரும் சாகிலை தாக்கியுள்ளனர்., தாக்குதலின் போது கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமியரான சாகிலை எப்படி இந்து பெண்ணை திருமனம் செய்ய முயற்சிக்கலாம் என கேட்டு அடித்துள்ளனர்.


இதற்கிடையில் சம்பயிடத்தை அடைந்த காவல்துறயினர், கலவரத்தை கட்டுப்படுத்தி சாகிலை மீட்டனர். மனமக்களை மீட்டு அருகில் இருக்கும் சிஹானி கேட் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக வினோத் மற்றும் நவீன் என்ற இருவர்களின் மீது IPC பிரிவு 147, 323, 504 -ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என காவல்துறை ஆனையர் பாண்டே தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை இந்த கலவரத்தில் ஈடுப்பட யாரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.