80 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயிலை சீரமைக்கும் முஸ்லீம்கள்!!
80 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயிலை சீரமைக்கும் பணியில் ஹிந்து மற்றும் முஸ்லீம்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
80 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயிலை சீரமைக்கும் பணியில் ஹிந்து மற்றும் முஸ்லீம்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட 12 கி.மீ தொலைவில் உள்ள அச்சன் என்ற கிராமத்தில் 80 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில் ஒன்று உள்ளது. தற்போது இந்த கோயிலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புல்வாமா மாவட்டல் சில தினங்களாக தீவிரவாதம் அதிகரித்து வருவதால் அவ்விடத்தை விட்டு ஹிந்துக்கள் வெளியேறினர். இந்நிலையில் தற்போது வெளியேறிய ஹிந்துக்களை மீண்டும் அங்கு வரவழைக்கும் விதமாக முஸ்லீம் மற்றும் காஷ்மீர் பண்டிட் குடும்பம் இணைந்து 80 ஆண்டுகள் பழைமையான கோவிலை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கோயில் வளாகம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அங்குள்ள கருவறையில் சாமி சிலை வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அங்கு உள்ளூர் முஸ்லீம் மக்களும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.