விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முத்தமிழ் செல்வி மேற்கொண்ட எவரெஸ்ட் சிகரம் தொடும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறியது. தனது முயற்சிகளுக்கு ஊக்கமளித்து உதவி செய்த அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து நன்றி தெரிவித்தார் சாதனை மங்கை. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பிலும் நிதி உதவி அளித்ததற்கு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து நன்றி தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எவரெஸ்ட் உச்சத்தில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.  



உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த என்.முத்தமிழ்செல்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை சில வாரங்களுக்கு (28.03.2023) முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்., 


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார் முத்தமிழ் செல்வி.  


நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட மலை ஏறும் குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி இந்த வீர தமிழச்சி சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உணவும் இல்லை... குடிக்க தண்ணி கூட இல்லை... சூடானில் சிக்கி தவிக்கும் 31 கர்நாடக பழங்குடியினர்!


எவரெஸ்ட் சிகரத்தில் முத்தமிழ்ச் செல்வி


நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கி சாதனை படைத்தார்.


பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பும் முத்தமிழ் செல்வி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இரு‌ குழந்தைகள் மற்ற்பிள்ளைகளுடன் 165 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு கீழே நடந்து வந்தார். இந்த சாதனையை 55 நிமிடங்களில்  முத்தமிழ் செல்வி முடித்தார்.


விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட முத்தமிழ் செல்வி, வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022-ஆம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து‌ 1,389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார்.


மேலும் படிக்க | சூடானில் இருந்து இந்தியர்கள் உட்பட 11 நாட்டு மக்களை வெளியேற்றியது சவூதி அரேபியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ