முசாபர்பூர் சிறுவர் காப்பக துஷ்பிரயோக வழக்கில் தண்டனை பெற்ற பிரஜேஷ் தாக்கருடன் ஒன்பது பெண்களும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காப்பகம் என்ற பெயரில் சிறுமிகளை அடைத்து வைத்து நாள்தோறும் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடுமை நடந்துள்ளது. இதில் முன்னாள் MLA உள்பட 9 பெண்கள் என ஏராளமானோர் தங்கள் காமத்தை தீர்க்க சிறுமிகளை சீரழித்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். காப்பகத்தில் உள்ள சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி காப்பகத்தில் இருந்த 35 சிறுமிகளை மீட்டனர். பின்னர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது.


முன்னாள் எம்.எல்.ஏ. பிரஜேஷ் தாக்கூர் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை சரியாக நடைபெறாது என்பதால் நீதிமன்ற உத்தரவால் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து.


இதனையடுத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, 35 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தண்டனை குறித்த விவரங்கள் ஜனவரி 28 ஆம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் அனைவரும் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.