வரும் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்: மோடி!
எனது அரசாங்கம் தான் வரும் ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிமுகபடுத்தியது என ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
எனது அரசாங்கம் தான் வரும் ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிமுகபடுத்தியது என ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பாலைவனத்தை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை கட்சிகளின் மாநாட்டின் 14 வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது, வரும் ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை தனது அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நில மறுசீரமைப்பு, மைக்ரோ பாசனம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பேரினார். அப்போது, மனித வலுவூட்டல் சுற்றுச்சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இதற்கு உலகத் தலைவர்களும் தங்களது ஆதரவை அழிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், நாடு முழுவதும் ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஆறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியின் பிறந்தநாள் முதல் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, பிளாஸ்டிக் பை, கப், பிளேட்டுகள், சிறிய பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், சில சிறிய பிளாஸ்டிக் சாஷே பைகள் உள்ளிட்டவை இந்தத் தடை உத்தரவில் அடங்கும். இந்தத் தடையானது, அந்த 6 பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதியைத் தடுக்கும் வகையில் இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலக அளவில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களாக் ஏற்படும் மாசுக்களால் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 50 சதவிகிதம் கடலில் சென்று சேர்கின்றன. இதனால், கடல் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடல் உயிரினங்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கும் அது பெரும் பாதிப்பை உண்டு செய்வதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க உள்ளது. இப்போது தடை செய்யப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மூலம், நாட்டில் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான பிளாஸ்டிக் மாசு குறைக்கப்படும். தடையை மீறியதற்கான அபராதங்கள் ஆரம்ப ஆறு மாத காலத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வரும், இது மாற்று வழிகளைக் கடைப்பிடிக்க மக்களுக்கு நேரத்தை அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில மாநிலங்கள் ஏற்கனவே பாலிதீன் பைகளை சட்டவிரோதமாக்கியுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கான கடுமையான சுற்றுச்சூழல் தரங்களையும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்துவதாக முதல் வட்டாரம் தெரிவித்துள்ளது.