வெளி உலகத்தை பார்க்காத தாய் - ஸ்கூட்டரிலேயே 56,000 கி.மீ. ஆன்மிக பயணம் அழைத்துச்செல்லும் அன்பு மகன்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தன் தாயாருக்கு ஸ்கூட்டரிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்மீக ஸ்தலங்களையும் காண்பித்து சாதனை படைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூர் அருகே போகாதி எனும் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 45 வயதான இவர் பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார். இந்நிலையில் கிருஷ்ணகுமாரின் அம்மா ரத்னம்மாவுடன் வசித்து வருகிறார். 74 வயதான ரத்னம்மா கணவரின் மறைவுக்குப்பிறகு மிகவும் தனிமையை உணர்ந்து வாடி வந்ததாக தெரிகிறது.
அவ்வாறு மகன் கிருஷ்னகுமார் தாயார் ரத்னம்மாவை ஆறுதல்படுத்த ஒருநாள் அவருடன் நீண்ட நேரம் பேசி ஒரு புரிதலுக்கு வந்தார். இத்தனை வருட கால வாழ்க்கையில் ரத்னம்மா சமையல் அறையைவிட்டு வெளியே சென்றதில்லை என்பதை கிருஷ்ணகுமார் உணர்ந்தார். மேலும் தாயார் ரத்னம்மா புனிதஸ்தலங்களுக்கு செல்ல மிகவும் விருப்பப்பட்டார் என்றும் கிருஷ்ணகுமார் தெரிந்துக்கொண்டார்.
மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்
அப்போது வரை திருமணம் முடிக்காமல் இருந்த கிருஷ்ணகுமாரிடம் ஓரளவு பணம் சேமிப்பில் இருந்துள்ளது. முதல் படியாக அவரது அம்மாவிற்கு வெளியுலகத்தை காட்ட வேண்டும் என்று கிருஷ்ணகுமார் எண்ணினார். மேலும் தங்களுடன் மறைந்த தனது தந்தையையும் அழைத்து செல்வதாக நினைத்து அவரது ஸ்கூட்டரையும் உடன் எடுத்துச்செல்ல ஆசைப்பட்டார். அதற்காக ஸ்கூட்டரையும் நன்கு பழுது பார்த்து எடுத்துக்கொண்டார்.
பின்னர் தனது தாயை அந்த ஸ்கூட்டரில் வைத்து கடந்த 2018 ஜனவரி மாதம் 16 ஆம் தேதி அவரது மாவட்டத்திற்கு அருகே உள்ள ஹாசன் மாவட்டத்தின் பேளூர் கோவிலுக்கு அழைத்துச்சென்றார். அன்று தொடங்கியது இவர்களின் ஆன்மிக பயணம்.
சுமார் 2 வருடங்கள் 9 மாதங்களில் தமிழகம், புதுவை, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். இது மட்டுமில்லாமல் நேபாளம், பூடான், மியான்மர் போன்ற பிரதேசங்களையும் இவர் இதுவரை தன் தாயாருக்கு காண்பித்துள்ளார். இதுவரை அந்த ஸ்கூட்டரில் 56,000 கிலோ மீட்டருக்கு இவர்கள் இருவரும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஓய்வில் இருந்த இருவரும் இப்போது மீண்டும் தங்களது ஆன்மிக பயணத்தை துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக அவர்கள் இருவரும் நேற்று ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் இதரக்கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர்.
அப்போது செய்தியாளருக்கு பேட்டியளித்த கிருஷ்ணகுமார்,
"நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம், அதனால் என் அம்மா தனது வாழ்நாள் முழுவதுமே சமையல் அறையிலேயே கழிக்க நேர்ந்தது. வெளியே செல்லவும் முடியாத சூழ்நிலையால் அருகில் இருக்கும் பேளூர் கோயிலுக்கு கூட செல்ல முடியவில்லையே என அவர் வருத்தப்பட்டுள்ளார். அன்று நான் எடுத்த தீர்மானமே இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்தியா முழுவதும் கொண்டு சென்று ஆன்மிக தளங்களை காண்பித்துவிட்டேன். உலகம் முழுவதும் அம்மாவிற்கு காண்பிக்க ஆசைப்படுகிறேன்.
தாய் தந்தை உயிருடன் இருக்கும்போதே பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மறைந்த பிறகு அவர்களை எண்ணி வருத்தப்படுவது முட்டாள் தனம். தினசரி குறைந்தது 30 நிமிடமாவது பெற்றோருடன் நேரத்தை செலவிட வேண்டும். அப்போது தான் அவர்கள் பட்ட துன்பம், இன்பம் குறித்து தெரிந்துகொள்ள முடியும். நாம் குழந்தையாக இருக்கும்போது அவர்கள் நம்மை எப்படியெல்லாம் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு வயதாகிவிட்ட பிறகு நாம் பெற்றோரை அவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G