நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள டிட்வாலா அருகே இன்று காலை 6.30 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 4 ஏசி பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதியது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 


துரந்தோ எக்ஸ்பிரஸ் வாசிந்த் மற்றும் அசான்காவ்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் இதுவரை யாரும் உயிர் இழந்ததாக தகவல் எதுவும் இல்லை. ஆனால் பலர் மோசமான நிலைமையில் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 


விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள மத்திய ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது.


CSMT 22694040


Thane 25334840


Kalyan 2311499


Dadar  24114836


Nagpur 2564342