NaMo செயலி தகவல்களை CleverTap ஊழியர்களால் அனுகமுடியாது!
பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் தங்கள் கருத்துகளை கூறவும், பகிர்ந்துகொள்ளவும் `NaMo` என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மக்களின் தகவல்களை திருடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக தெரிவித்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் தங்கள் கருத்துகளை கூறவும், பகிர்ந்துகொள்ளவும் 'NaMo' என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மக்களின் தகவல்களை திருடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைகுறிய கருத்திற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். முன்னதாக நேற்று காலை பாஜக தலைவர் ஸ்மிரித்தி இராணி அவர்கள் சோட்டா பீம்-கூட ராகுலை விட நன்றாக பேசுவார் என தெரிவித்தார். இவரை அடுத்து பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாட்ரா தெரிவிக்கையில் "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழில்நுட்பம் குறித்து தெரியாமல் பேசுகின்றார்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட CleverTap நிறுவனம் தங்கள் கருத்தினை வெளியிட்டுள்ளது. மூன்று இந்தியர்களின் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இந்த கருத்தினால் பெரும் சர்ச்சையில் தவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் சக நிறுவனர் ஆனந்த் ஜெயின் தெரிவிக்கையில் "CleverTap ஊழியர்களுக்கு பயனர்களின் விவரங்களை அனுகுவதற்கு அனுமதி இல்லை" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, NaMo செயலியை குறித்து பிரான்ஸ் இணையத் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியாட் ஆல்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த செயலில் பயனரிடம் கோரப்படும் தகவல்கள் அமெரிக்காவில் உள்ள CleverTap என்ற நிறுவனத்துடன் பகிரப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டே இப்போதைய சர்ச்சைக்கு காரணம் ஆகும்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“ஹாய். என் பெயா் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமா். எனது செயலியை நீங்கள் பயன்படுத்தினால் உங்களது அனைத்து தகவல்களையும், உங்களின் அனுமதியில்லாமல், அமெரிக்க நிறுவனங்களில் உள்ள எனது நண்பா்களுக்கு வழங்குவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்திற்கு பின்னர் பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்த வண்னம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது CleverTap நிறுவனம் தங்கள் விளக்கத்தினை அளித்துள்ளனர்.