வருகிற 27-ந்தேதி மேகாலயாவில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்ககாக ராகுல் காந்தி தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேகாலயா மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 27-ந்தேதி நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கு பிரசாரம் செய்தார். மென்டிபாதர் பகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசார பொதுக் கூட்ட மேடையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.



பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி தொடர்புடைய வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.22 ஆயிரம் கோடியுடன் வெளி நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதை பிரதமர் அறிந்து அடுத்த வெளிநாட்டு பயணத்தின் போது, நமது அனைவர் சார்பாகவும் அவரை பிரதமர் அடுத்த வெளிநாட்டு பயணத்தின் போது அழைத்து வர வேண்டும் என்றார்.


மேலும், நரேந்திர மோடி ஊழலுக்கு எதிராக பேசவில்லை என்றும்  ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.