மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தாமரைக்கு வலுவூட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் கட்சி எம்.பி.க்களுடன் விரிவாக விவாதித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தின் அரசியல் நிலைமையை கையிலெடுத்துள்ள அவர், சட்டமன்றத் தேர்தலில் கட்சியை கவர்ந்திழுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவாதித்து வருவதாக தெரிகிறது.


அந்த வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான மூலோபாயத்தை பாஜக தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் அமர்வின் போது, ​​பிரதமர் மோடி மேற்கு வங்காள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வெவ்வேறு சுற்றுகளில் கலந்துரையாடியுள்ளார். தேர்தல் மூலோபாயத்தை தயாரிப்பதற்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாநில மக்களின் எதிர்வினையையும் அவர் கேட்டறிந்துள்ளார்.


பிரதமர் மோடியின் இந்த வியூகங்கள் மேற்கு வங்கத்தில் ஒரு பெரிய வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற தயாராகிவிட்டது என்பதை நமக்கு காட்டுகிறது.


மக்களவைத் தேர்தலின் போது ஆளும் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து நின்ற பாஜக மொத்தம் உள்ள 42 இடங்களில் 18 இடங்களை கைப்பற்றியது. இந்த மாபெறும் முன்னேற்றம் மூலம் பாஜக ஏற்கனவே இதன் ஒரு அடையாளத்தை பதித்தது. தேர்தல் களத்தில் இந்துக்களின் துருவமுனைப்புடன் சிறுபான்மையினரை நோக்கி மம்தா பானர்ஜி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான ஒரு மூலோபாயத்தை பாஜக இப்போது தயாரித்து வருகிறது. 


இதுகுறித்து மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், பிரதமர் மோடி ஒரு எம்.பி.யுடன் பேசுவார், அவரது தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை பட்டியலிடுவார், பின்னர் இதனைக்கொண்டு தேர்தல் மூலோபாயம் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் பாஜக ஆட்சி பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.