இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான விலையினை காட்டிலும் 1 GB மொபைல் டேட்டா மலிவாக கிடைக்கும் என ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13-வது இந்திய - ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். மாநாட்டிற்காக டோக்கியோ சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நேற்று தொடங்கிய 2 நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இந்தாவில் தொலை தொடர்பு துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நாட்டில் முன்னேற்ற பாதைக்கு பெருமளவில் உதவி புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் தொலைதொடர்பு துறையில் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வரையில் உயரும் எனவும், சுமார் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை இளம் சமுதாயத்திற்கு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவின் இணைய சேவைத் துறை 2022-ஆம் ஆண்டில் 76.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் எனவும், இது தற்போதைய வளர்ச்சியை காட்டிலும் 40% அதிகமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கையடக்க செல்பேசிகளின் மூலம் இந்தியாவின் கடை கோடி கிராமங்கள் வரையில் தகவல்தொடர்பு துறை எட்டியுள்ளது. இந்தியாவை பொருத்தமட்டில் சுமார் 100 கோடி மக்கள் கைப்பேசிகளை பயன்படுத்திவருகின்றனர் எனவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்காப்பு கலை மிகவும் பிரபலமாக இருக்கும் ஜப்பானில் கபாடி மற்றும் கிரிக்கெட் போட்டிகளையும் அறிமுகப்படுத்தியாதற்காக இந்திய புலம்பெயர்ந்தவர்களை மோடி இந்நிகவழ்வில் பாராட்டினார்.


இந்த இரண்டு நாள் உச்சிமாநாடு இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகளில் முன்னேற்றத்தையும், இருதரப்பு உறவின் மூலோபாய பரிமாணத்தை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக அவர் பேசுகையில், ''தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மிகப்பெரும் மாற்றத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. மனித நேயத்தோடு இந்தியா செய்யும் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!