மும்பையில் நடைபெற்று வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாம் ஆண்டு கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது அவர், இந்தியா பொருளாதார முன்னேற்ற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிதி ஒருங்கிணைப்பு பாதையில் அரசு உறுதியாக உள்ளது. முதலீட்டாளர்கள் வளர்ச்சி மற்றும் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றதிற்கு இந்தியா உறுதுணையாக உள்ளது என பொருளாதார நிலை குறித்து பேசிய அவர், இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்ட எமர்ஜென்சியை குறித்து பேசினார்.


அவர் கூறியதாவது:-


> இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி கறுப்பு நாளாக உள்ளது.


> எமர்ஜென்சி கொண்டு வந்து காங்கிரஸ் பாவத்தை செய்த்துள்ளது


> எமர்ஜென்சி காலத்தில் ஏற்பட்ட கொடுமைகளை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


> எமர்ஜென்சியால் ஜனநாயகம் துண்டாடப்பட்டது. 


> பார்லிமெண்ட் முடங்கியது. ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது.


> அரசியல் சாசனம் தவறாக பயன்படுத்தப்பட்டது.


> அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 


> அரசியல் சாசனத்தை இந்திரா குடும்பத்தினர் தவறாக பயன்படுத்தினர்.


> ஆனால் அரசியல் சாசனம் என்பது பா.ஜ.,விற்கு கடவுள் மாதிரி 


இவ்வாறு அவர் பேசினார்.