Narendra Modi Took Oath As PM: டெல்லி ராஷ்டிரபதி பவனில் (Delhi Rashtrapati Bhavan) நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துகொண்டார். இதன்மூலம், நேருவுக்கு பின் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்பு


பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை குடியரசு தலைவர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு குடியரசு தலைவர் மொஹமட் முய்சு, சீஷெல்ஸ் துணை குடியரசு தலைவர் அஹமட் அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பங்கேற்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், மாநில முதல்வர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும், பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். 


மேலும் படிக்க | மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்


மூன்றாவது முறை...


1952, 1957, 1962 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவியேற்றார். தற்போது அதேபோல், 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். நரேந்திர மோடி 2001ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை குஜராத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 


72 அமைச்சர்கள்


பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பிரதமர் மோடியுடன் 30 பேர் மத்திய அமைச்சராகவும், 5 பேர் தனி பொறுப்பு கொண்ட இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவு்ம பதவியேற்க உள்ளனர். இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். 72 அமைச்சர்களில் 6 பேர் சிறுபான்மையினர் ஆவர்.


பிரதமர் மோடி பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சௌகான், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட கேபினட் அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.


மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ