சைகை மொழியில் தேசிய கீதம் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவை மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே நேற்று வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 3.35 நி.மி., ஓடக்கூடிய இந்த வீடியோவை பிரபல திரைப்பட இயக்குனர் கோவிந்த் நிஹலானி இயக்கியுள்ளார். 


இந்த வீடியோவில் டெல்லி செங்கோட்டையின் பின்னணியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் சைகை மொழியில் தேசிய கீதத்தை வழங்கியுள்ளனர்.


இந்த விடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேகூறியதாவது:-


சைகை மொழியைச் சார்ந்துள்ளோருக்காக தேசிய கீதம் தயாரிக்கப்பட்டது எங்களுக்குப் பெருமிதமான தருகிறது. இந்தப் பிரிவில் வருவோரை நாம் ஊனமுற்றோர் என்று குறிப்பிட்டு வந்தோம். ஆனால் அதை மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியது.


இது மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைச் சுலபமாக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். இந்தியா என்பது புராதனமான நாடாகும். இங்கு பண்டைக்காலம் தொட்டே சைகை மொழி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றார் அவர்.