தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 



 


 


வட மாநிலங்களில் கடுமையான குளிரும் நிலவுகிறது. கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. மேலும், குளிர் காற்றும், அடர் பனிமூட்டமும் இருந்ததால், ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 



இந்நிலையில், இன்று காலை முதல் டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையானது சிறுது நேரம் ஐஸ் மழையாக பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் குளிர் மேலும் அதிகரிகக்கூடும் என்று கருதப்படுகிறது.