தமிழக மக்களிடம் நான் பேசியபோது அவர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சந்திக்கும் பிரச்னைகள் புரிந்தன என தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் மோடி பேச்சு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர். உறுதிமொழிப் பத்திரம் என பொருள்படும் வகையில், சங்கல்ப பத்ரா என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 


சேதத்திற்கு முதன்மை என்ற தலைப்பில் தீவிரவாதம், பயங்கரவாதம் தொடர்பாக துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும், பாதுகாப்புத் துறைக்கான கொள்முதலில் சுயசார்பு உறுதிப்படுத்தப்படும், எல்லைகளில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.


இதை தொடர்ந்து, மக்களவை தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,  தேசியம் தான் எங்களது நோக்கம். பலவீனமான சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பது எங்களது கொள்கை, சிறந்த நிர்வாகம் எங்களது மந்திரம். நட்டு மக்களுக்கும், கட்சி நிவாகிகளுக்கும் 5 ஆண்டில் எனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க ராஜ்நாத் சிங் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பணியாற்றியுள்ளார். 


அரசு தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை அறிந்து சிறந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் ஆன்மாவை தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது. சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் கனவு நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படும். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 




அதனை, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுவோம். இந்தியா வளர்ச்சி பெற, வளர்ச்சி என்பது பெரிய இயக்கமாக மாற வேண்டும். 2047-க்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாறும் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். ஆசியாவை இந்தியா வழிநடத்தி செல்லும். இவ்வாறு பிரதமர் பேசினார்.