தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக திங்கள்கிழமை (டிசம்பர் 30) ​​பதவியேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு மாதங்களில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பவர் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். அஜித் பவார் NCP தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகன் மற்றும் பாரமதியைச் சேர்ந்த MLA ஆவார். அதேவேளையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் சவனும் பதவியேற்றார்.


வொர்லி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதித்யா தாக்கரே அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆதித்யாவுக்கு உயர்கல்வி அமைச்சகம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் மதியம் 1 மணிக்கு மகாராஷ்டிரா ஆளுநர் BS கோஷ்யரி அவர்களால் அமைச்சரவை அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட மொத்தம் 36 அமைச்சர்கள் பதவியேற்பு நடைப்பெற்றது.


Read Also : மகாராஷ்டிரா அமைச்சரவையில் ஆதித்யா தாக்கரே-வுக்கு வாய்ப்பு!


24 அமைச்சரவை அமைச்சர்களும் 10 மாநில அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்பார்கள் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவை அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள தலைவர்கள்: அசோக் சவான், திலீப் வாஸ் பாட்டீல், தனஞ்சய் முண்டே, விஜய் வாதேட்டிவார், அனில் தேஷ்முக், ஹசன் முஷ்ரிப், வர்ஷா கெய்க்வாட், ராஜேந்திர ஷிங்கனே, நவாப் மாலிக், ராஜேஷ் டோப், சுனில் கெயதர் , அனில் தேஷ்முக், தாதா பூஸ், ஜிதேந்திர அவாத், சந்தீப் பூமரே, பாலாசாகேப் பாட்டீல், யஷோமதி தாக்கூர், அனில் பராப், உதய் சமந்த், கே.சி. பட்வி, அஷ்லாம் செயிக் மற்றும் ஆதித்யா தாக்கரே என குறிப்பிடப்பட்டுள்ளது.


மாநில அமைச்சராக பதவியேற்கவுள்ள தலைவர்கள் அப்துல் சத்தார், பண்டி பாட்டீல், சபுராஜே தேசாய், பச்சு காடு, விஸ்வாஜித் கதம், தத்தாராயே பார்னே, அதிதி தட்கரே, சஞ்சய் பன்சோட், பிரஜகத் தன்புரே மற்றும் ராஜேந்திர பாட்டீல் பெத்ராவர்க்கர் என பட்டியலிடப்பட்டுள்ளது.


காங்கிரசின் பாலாசாகேப் தோரத் மற்றும் நிதின் ரவுத், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய் மற்றும் NCP-யின் ஜெயந்த் பாட்டீல் மற்றும் சாகன் புஜ்பால் ஆகியோர் ஏற்கனவே நவம்பர் 28 அன்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் NCP ஆகியோரால் இறுதி செய்யப்பட்ட சூத்திர ஒப்பந்தம், சிவசேனாவில் 16 அமைச்சர்கள் (முதலமைச்சரைத் தவிர), NCP 14 மற்றும் காங்கிரஸ் 12 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.