கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் பிரதமர் வேட்பாளரான இம்ரான் கான் பாகிஸ்தானின் புதிய பிரதமாராக பதவியேற்ற விழாவில் முன்னால் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து சென்றிந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துகொண்டார். பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கான் அமர்ந்திருந்த முன் வரிசையில் சித்தும் அமர்ந்திருந்தார். இந்த சம்பவங்களுக்கு சமூக வலைதளங்களில், குறிப்பாக பா.ஜ. கட்சியை சேர்ந்தவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர். இதுக்குறித்து தொலைகாட்சிகளிலும் விவாதங்கள் நடைபெற்றனர்.


இதுகுறித்து விளக்கம் அளித்த நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது, கடந்த காலத்தில் இரு நாடுகளும் சமாதானத முயற்சிகளுக்காக வாஜ்பாய் ஜி "லாகூர் வரை பஸ்ஸில் பயணம் செய்தார். அதில் முஷாரஃப் இருந்தார். மோடி பிரதமராக பதவியேற்ற போது நவாஸ் ஷரிஃபை அழைத்திருந்தார். ஒருநாள் திடீரென லாகூர் சென்றார் பிரதமர் மோடி. ஆனால் யாரும் அவரிடம் கேள்வி கேட்கவில்லை என்றார்.


பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்ததை விமர்சித்து உள்ளார் எனக் கேட்டதற்கு. அவர் கட்சியின் கேப்டன் என்ற முறையில் என்னை விமர்சித்துள்ளார். அதற்கு பதில் தரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. 


 



இம்ரான் கான் பதவியேற்ற விழாவிவில் கலந்துக்கொள்ள 10 முறை எனக்கு அழைப்பு வந்தது. நான் மத்திய அரசிடம் அனுமதி தருமாறு கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. காத்திருந்தேன். இரண்டு நாட்கள் கழித்து பாகிஸ்தான் செல்ல தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் கூறினார். அனுமதி கிடைத்ததினால் தான் அங்கு சென்றேன். 


 



அங்கு சென்றது எந்தவித அரசியல் காரணமும் இல்லை. நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்தது என்பது உணர்வு பூர்வமான நிகழ்ச்சியே எனக் கூறினார். அதேபோல முன்வரிசையில் மசூத் கானுடன் அமர்ந்திருந்தது, பதவியேற்ப்பி விழா தொடங்குவதற்கு முன்பாக எனது இடம் மாற்றப்பட்டு, முன் வரிசையில் இடம் ஒதுக்கியதால், அங்கு அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என தன் மீதான விமர்சனத்தை குறித்து விளக்கம் அளித்தார்.