கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து காங்கிரசில் இணைந்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராகவும், தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராகவும், தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
பா.ஜனதாவில் எம்.பி.யாக இருந்த சித்து அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விலகினார். அதோடு தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை இன்று சித்து சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்து போட்டியிடுகிறார். அவர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார். இது அவரது மனைவி கடந்த தேர்தலில் வென்ற தொகுதியாகும்.
சித்துவின் மனைவி கவூர் ஏற்கனவே பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். தற்போது சித்துவின் வருகை மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது.