பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் காட்சியின் படு தோல்வியை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா தனது பதவியல் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரைத்தொடர்ந்து மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா அறிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து, முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு எதிராக, இருகட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், சபாநாயகரிடம், தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இக்கடிதங்களின் மீது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் நேற்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.


இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10 ஆம் தேதி ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார் சித்து.