இன்று இந்தியா முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்படுகின்றது. நவராத்திரியில் வரும் தசமி, அதாவது பத்தாவது நாள் விஜய தசமியாகக் (Vijayadasami) கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் துவக்கப்படும் அனைத்து காரியங்களும், வெற்றியைத் தேடித் தரும் என்பது ஐதீகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படிப்பு, கலைகள மற்றும் பல நல்ல செயல்களை மக்கள் விஜயதாமியன்று துவக்குகிறார்கள்.


வட இந்தியாவில் இந்த நாளில் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. ராமர் ராவணனை வெற்றிகொண்ட நாள் என்பதை வலியுறுத்தும் விதமாக, பல இடங்களில் ராவணனை எரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.


நம்முள் இருக்கும் தீய குணங்களை எரித்து நன்மையால் அவற்றை வெல்ல வேண்டும் என்பது இதன் தாத்பர்யமாகும். தீமைக்கு எதிரான சத்தியத்தின் வெற்றியை இந்த நாள் குறிக்கிறது.


நம்பிக்கைகளின் படி இந்த புனித நாளில் சில விஷயங்களைச் செய்வது நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும். இவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:


நல்ல துவக்கம்


நாம் பல நாட்களாக ஏதாவது கலையை கற்கவோ அல்லது ஒரு புதிய பணியை செய்யவோ திட்டமிட்டிருந்தால், அதை நாம் இந்நாளில் தொடங்கலாம். விஜயதசமி அன்று துவங்கும் வேலை வெற்றிப்பாதையை நோக்கி மட்டுமே பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


ALSO READ: ராவணனின் மறுபக்கம்: அரக்கனுக்குள் ஒரு அறிஞன், பத்து தலைகளுக்குள் பல்லாயிரம் கலைகள்!!


மீன் தரிசனம்


விஜயதசமி அன்று தண்ணீரில் மீன்களைப் பார்ப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவதற்கான அறிகுறியாகும்.


பறவை தரிசனம்


பனங்காடை எனப்படும் நீலகண்ட  பறவையைப் பார்ப்பது மிகவும் புனிதமான அடையாளமாகக் கருதப்படுகிறது. நம்பிக்கைகளின்படி, அப்பறவையைப் பார்ப்பவரின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் அவரது வாழ்க்கையில் எதிர்பாரா பல நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும்.


சிவன் மற்றும் ராமர் தரிசனம்


சிவன் கோயில் அல்லது ராமர் கோயிலுக்குச் சென்று வணங்குவது இந்த நாளில் புனிதமான ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் தரிசத்திற்கு சிறப்பு பலன் கிடைக்கும். பண வரவு, உடல் ஆரோக்கியம், புகழ், புத்தி கூர்மை ஆகியவை வந்து சேரும்.


வெற்றிலை பாக்கு உண்பது


விஜயதசமியன்று பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலையை உட்கொள்வது மிகவும் மங்கலமான விஷயமாகும். இதற்கு


சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மேலும் இந்த நாளில் ஆஞ்சநேயருக்கு தாம்பூலம் நெய்வேத்தியம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் பல வெற்றிகள் நம்மை வந்தடையும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. 


ALSO READ: விஜயதசமி 2020: வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்