இந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார்  ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதை பொருள் விவகாரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மும்பை கடல்பரப்பில் உல்லாசக் கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில், போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் மற்றும் வேறு இரண்டு பேரை அக்டோபர் 13 வரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) திங்கள்கிழமை (அக்டோபர் 4) கோரியது. இதை அடுத்து அவரை அக்டோபர் 7ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் வாட்ஸ்அப்  சாட்கள் மூலம் "அதிர்ச்சியூட்டும்"  தகவல்கள் கிடைத்துள்ளதாக NCB திங்களன்று நகர நீதிமன்றத்தில் கூறியது. கப்பலில் இருந்து மருந்துகள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வாட்ஸ்அப் சாட் விபரங்கள், ஆரியன் கானிற்கு போதைப் பொருள் தொடர்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது என NCB கூறியுள்ளது.


ALSO READ | போதை பொருள் விவகாரம்; சிக்கிலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன்..!!!


போதைப்பொருள் தடுப்பு பிரிவு  (NCB), வியாழக்கிழமை வரை  குற்றம் சாட்டப்பட்ட ஆரியன் கான் மற்றும் வேறு எட்டு  பேர்களை காவலி எடுத்துள்ள நிலையில், வாட்ஸ்அப் சாட்கள் மூலம்  போதை பொருளை பெற பணம் செலுத்தும் முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது  என NCBநீதிமன்றத்தில் கூறியது. 


எனினும், ஆர்யான் கானின் வழக்கறிஞர் ஆரியன் கானிடம் இருந்து எந்த போதை மருந்துகளும் மீட்கப்படவில்லை என்று கூறினார்.


ALSO READ | நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR