தேர்தலில் நான் போட்டியிடவில்லை; எனக்கு பதில் எனது குடும்பத்தினர் போட்டி: சரத்பவார்
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் இன்று(திங்களன்று), வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, இந்த நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்திருகிறேன். மேலும் எனது குடும்ப உறுப்பினர்களில் இருவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் மகள் சுப்பிரியா சுலே (Supriya Sule) மற்றும் பேரன் பாரத் பவார் (Parth Pawar) ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். நான் ஏற்கனவே 14 முறை தேர்தலில் போட்டியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
பவார் குடும்பத்தின் கோட்டை என்று கூறப்படும் பாரமதி தொகுதியில் மகள் சுப்பிரியா சுலே போட்டியிடுவார். அதேபோல அவரது மகன் முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவார் மாவல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலுக்கான அட்டவணை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும். தற்போதைய மக்களவை ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைகிறது.