தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறையினர் பிரமாண பாத்திரம் தாக்கல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு பணியகம் (ACB) ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நாக்பூரில் பாசன திட்டங்களில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் அஜித் பவருக்கு ஒரு சுத்தமான சிட் வழங்கியுள்ளது. 


கடந்த 1999 முதல் 2014 வரை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக அஜித்பவார் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த திட்டங்களை அமல்படத்தியதில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த பா.ஜ.க ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அஜித் பவார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். கடந்த பா.ஜ.க, ஆட்சி காலத்தில், இந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜ.க-வின் பட்னவிஸ் முதல்வராக பதவியேற்ற போது, அஜித்பவார் எதிராக தொடரப்பட்ட நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில் 9 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அஜித் பவாருக்கு இந்த முறைகேடுகளில் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக 9 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இது வழக்கமான நடைமுறைதான்'' என தெரிவித்தனர்.


இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம், ''கடந்த நவம்பர் 27 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிகாரிகள் செய்த தவறுக்கு அஜித்பவார் பொறுப்பேற்க முடியாது. அவரது தரப்பில், சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை. இதனால், வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாகவும்'' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீர்ப்பாசன மோசடியில் என்.சி.பி தலைவர் அஜித் பவார் ஊழல் தடுப்பு பணியகத்தால் ஒரு சுத்தமான சிட் பெற்றுள்ளார்.