தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் தன்னை துணை முதல்வராக்க விரும்புவதாக அக்கட்சி மாநில தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உள்ளது என்றும் மூத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் மாதம் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பரமதி மக்கள் தனக்கு வாக்களித்துள்ளனர் என்றும், அவர் தனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவார் என்றும் அஜித் பவார் மேலும் தெரிவித்துள்ளார். 


இதனிடையே பல கோடி பாசன ஊழலில் இருந்து மும்பை காவல்துறை ஊழல் தடுப்பு கிளை அவரை விடுவித்தது குறித்து கேள்வி எழுப்புகையில் அவர் அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தன்னை மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பார்க்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள், ஆனால் இந்த விஷயத்தில் ஒரு முடிவை NCP மேலாளர் சரத் பவார் தான் எடுப்பார் என்றும் பவார் குறிப்பிட்டார்.


முன்னதாக மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜகவுக்கு அஜித் பவார் தனது ஆதரவை வழங்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில்., ​​இந்த விஷயம் குறித்து தான் எதுவும் பேச விரும்பவில்லை என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த சனியன்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்தர பட்னாவிஸ்., மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சி தலைவர் ஷரத் பவாரின் முழு ஆதரவும் இருப்பதாக அஜித் பவார் தன்னிடம் கூறியதாக கூறியிருந்தார், இதன் காரணமாகவே அவர்கள் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தனர்.


இதுகுறித்து ZEE மீடியாவிடம் பிரத்தியேகமாக பேசிய பட்னாவிஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்று அஜித் தன்னிடம் கூறியதாகவும், பாஜக-வின் ஆதரவுடன் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.


நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக நவம்பர் 23 அன்று பதவியேற்றார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான NCP, காங்கிரஸ் மற்றும் சேனா இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிய ஒரு நாள் கழித்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது.


பின்னர் நவம்பர் 26 அன்று, பட்னாவிஸ் அரசாங்கத்தின் பலத்தை சோதிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பட்னாவிஸ் அறிவித்தார். அஜித் பவாரும் இதே நாளில் முன்னதாக தனது பதவியினை ராஜினாமா செய்தார். பவாரின் ராஜினாமா மீது தனது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பட்னாவிஸ் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.