கள்ளநோட்டுகள் அதிகரிப்பு! 2021ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60% 2000 தாள்கள்!
Fake Currency In India: கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் போலி நோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021-ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60 சதவீதம் 2000 தாள்கள்.
NCRB Data: கடந்த 2021 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 சதவீதம் ரூபாய் 2,000 மதிப்புடையவை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. அதாவது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ரூ.20.39 கோடி மதிப்புள்ள 3,10,080 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.12.18 கோடி மதிப்புள்ள 60,915 நோட்டுகள் ரூ.2,000 மதிப்பிலானவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான போலி ரூ.2,000 நோட்டுகள் தமிழ்நாட்டில் 25,012 நோட்டுகள் மீட்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கேரளா 9,065 நோட்டுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 5,012 போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, கடந்த ஆண்டும் ரூ.500 மதிப்பிலான ரூ.6.6 கோடி மதிப்புள்ள போலிப் பணமும், ரூ.200 மதிப்பிலான ரூ.45 லட்சமும் கண்டுபிடிக்கப்பட்டது.
2016 நவம்பரில், பணமதிப்பிழப்பு (Denomination) நடவடிக்கை என்ற பெயரில், முன்பு புழக்கத்தில் இருந்த மிக உயர்ந்த ரூபாய் நோட்டுகள் எனக் கருத்தப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு ரத்து செய்தது. அவற்றை மாற்றி புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. கறுப்புப் பணம் ஒழிப்பு, ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) கூறினார்.
மேலும் படிக்க: Fact Check: காந்தி படம் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் உள்ள நோட்டு கள்ள நோட்டா..
எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் போலி நோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016-ல் ரூ.15.92 கோடி போலி நோட்டுகள்,
2017-ல் 28.10 கோடி போலி நோட்டுகள்,
2018-ல் 17.95 கோடி போலி நோட்டுகள்,
2019-ல் 25.39 கோடி போலி நோட்டுகள்,
2020-ல் 92.17 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகள் (Fake Currency) பறிமுதல் செய்யப்பட்டன.
2021 மார்ச் மாதம், கடந்த 2 ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதேபோல இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்தும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை குறைந்தபட்சமாக குறைத்துள்ளதாக 2019 ஆம் ஆண்டு கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்; RBI அதிர்ச்சித் தகவல்; கண்டுபிடிப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ