மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் தேர்வு!!
மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் தேர்வு!!
நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதன்பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேற்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் வெற்றிபெற்றுள்ளார்.