பொது சிவில் சட்டம் இந்திய தத்துவத்திற்கு எதிரானது: மேகாலயா முதல்வர்
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், அதனை சில கட்சிகள் எதிர்த்தும் சில கட்சிகள் ஆதரித்தும் வருகின்றன.
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், அதனை சில கட்சிகள் எதிர்த்தும் சில கட்சிகள் ஆதரித்தும் வருகின்றன. போபாலில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்திருந்தார்.
பிரதமரின் பேச்சு குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்-மந்திரியுமான கான்ராட் சங்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம், அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்திய தத்துவத்திற்கு எதிரானது. இருப்பினும் சட்ட வரைவின் உண்மையான விஷயங்களை பார்க்காமல் அது குறித்த விவரங்களைக் கூறுவது கடினம்’ என்று தெரிவித்தார்.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றன. எனினும், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இதனை ஆதரிக்கின்றன. பொது சிவில் சட்டம் சிறுபான்மை சமூகங்களின் மத சுதந்திரத்தை மீறும் என்றும், தற்போதைய தனிநபர் சட்டங்கள் சிறப்பாகச் செயல்படுவதால், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்றும் பல எதிர் கட்சிகள் கூறுகின்றன. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், தி.மு.க ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகின்றன. பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒரே மாதிரியான சிவில் சட்டம் (யுசிசி) பாஜகவின் “தேர்தல் நிகழ்ச்சி நிரலில்” எப்போதும் இருக்கும் விஷயம் என்று கூறினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இது குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் கூறும்போது, “அவசரப்பட்டு இவ்வளவு பெரிய முடிவை எடுக்கக் கூடாது என்று தான் இவ்வாறு சொல்கிறோம்," என்றார்.
முன்னதாக, இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கடந்த புதன்கிழமை (ஜூன் 14) அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) தொடர்பாக மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. போபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சி (BJP) நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் தேவை என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்ச்சிகரமான பிரச்சினையில் முஸ்லிம்கள் தவறாக தூண்டப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இரட்டை முறை சட்ட விதிகளுடன் நாடு எவ்வாறு இயங்க முடியும் என்று அவர் வாதிட்டார். ஒரு குடும்பத்தில் இரண்டு சட்டங்கள் இயங்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ