பொது சிவில் சட்டம்... வலியுறுத்தும் பிரதமர் மோடி... எதிர்க்கும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்!

நாட்டிலுள்ள முஸ்லிம்களின் மிகப்பெரிய மத அமைப்பான அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒரு கூட்டத்தை நடத்தி, பொது சிவில் சட்டத்தை (யுசிசி) தொடர்ந்து எதிர்த்துப் போராட முடிவு செய்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2023, 04:12 PM IST
  • வாரியம் தனது வாதங்களை சட்ட ஆணையத்தின் முன் இன்னும் வலுவாக முன்வைக்க முடிவு.
  • ஆணையத்தின் முன் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஜூலை 14 கடைசி நாள்.
  • போபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்.
பொது சிவில் சட்டம்... வலியுறுத்தும் பிரதமர் மோடி... எதிர்க்கும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்! title=

நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியாவின் உயர்மட்ட முஸ்லிம் அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசரக் கூட்டத்தை நடத்தியது. நாட்டிலுள்ள முஸ்லிம்களின் மிகப்பெரிய மத அமைப்பான அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒரு கூட்டத்தை நடத்தி, பொது சிவில் சட்டத்தை (யுசிசி) தொடர்ந்து எதிர்த்துப் போராட முடிவு செய்தது. பொது சிவில் சட்டத்தை (UCC) பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த ஆன்லைன் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக, இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கடந்த புதன்கிழமை (ஜூன் 14) அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) தொடர்பாக மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. 

முஸ்லிம்கள் வாரியத்தின் மூத்த உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி இது குறித்து கூறுகையில், ‘வாரியத்தின் ஆன்லைன் கூட்டம் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது, இதில் வாரியத்தின் தலைவர் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி உட்பட வாரியத்தின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொது சிவில் சட்டம் தொடர்பாக வாரியத்தின் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தில் முன்வைக்க வேண்டிய ஆட்சேபனைகளின் வரைவு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது’ எனக் கூறினார்.

போபாலில் நடந்தது ஒரு பொதுக் கூட்டம் என்றும், போபாலில் யுசிசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கைக்கு எதிர்வினையாக இதை எடுத்துக் காட்டக் கூடாது என்றும் அவர் கூறினார். மௌலானா ஃபராங்கி மஹாலி கூறுகையில், கூட்டத்தில் யுசிசியை தொடர்ந்து எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் வாரியம் தனது வாதங்களை சட்ட ஆணையத்தின் முன் இன்னும் வலுவாக முன்வைக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க | முத்தலாக் முறைக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை! பொது சிவில் சட்டம் அவசியம்-பிரதமர்

ஆணையத்தின் முன் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஜூலை 14 கடைசி நாள். இந்தியா போன்ற பன்முக கலாச்சாரம் மற்றும் பலதரப்பட்ட மரபுகளைக் கொண்ட நாட்டில், அனைத்து குடிமக்கள் மீதும் ஒரே சட்டத்தை திணிக்க முடியாது என்று வாரியம் நம்புகிறது, இது குடிமக்களின், ஜனநாயக, மத உரிமைகளை மீறுவது மட்டுமல்ல, இது அடிப்படை ஆன்மாவிற்கு எதிரானது என்றும் அவர் கூறினார். 

செவ்வாய்க்கிழமை போபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சி (பாஜக) நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் தேவை என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்ச்சிகரமான பிரச்சினையில் முஸ்லிம்கள் தவறாக தூண்டப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இரட்டை முறை சட்ட விதிகளுடன் நாடு எவ்வாறு இயங்க முடியும் என்று அவர் வாதிட்டார். ஒரு குடும்பத்தில் இரண்டு சட்டங்கள் இயங்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | காவடி யாத்திரை வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சிகளை விற்க தடை: யோகி ஆதித்யநாத்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News