காணாமல் போன 88 ஆயிரம் கோடி... எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள் - யார் பொறுப்பு?
500 Rupees Note Missing: புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
500 Rupees Note Missing: அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கியால் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், கணக்கில் வராத இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 88,032.5 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாயின் 8,810.65 மில்லியன் பணத்தாள்கள் மூன்று இந்திய நாணய அச்சகங்கள் வெளியிட்டதாகவும், ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி 7260 மில்லியன் பணத்தாள்களை மட்டுமே பெற்றதாகவும் ஓர் அறிக்கை கூறுகிறது. மீதமுள்ள எண்ணிக்கையிலான நோட்டுகளை காணவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டும், இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பண பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.. இல்லை என்றால் சிக்கல் தான்!
இந்திய ரூபாய் நோட்டுகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் மூன்று அச்சகங்களால் அச்சிடப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட், நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் மற்றும் தேவாஸில் உள்ள வங்கி நோட்டு அச்சகம். இந்த மூன்று அச்சகங்களும் அச்சிடப்பட்ட நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்புகின்றன. நாட்டில் பணப்புழக்கத்தை பராமரித்து நிர்வகிப்பது ரிசர்வ் வங்கிதான்.
2015 மார்ச் முதல் 2016 டிசம்பர் வரை
மனோரஞ்சன் ராய் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலை இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அவர் இந்திய ரிசர்வ் வங்கியிடம் 500 ரூபாய் நோட்டுகளின் நிலை குறித்து அதில் கேள்விகளை கேட்டிருந்தார். 2015-16 காலகட்டங்களில் நாசிக் அச்சகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டின் 375.450 மில்லியன் பணத்தாள்களை அச்சிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் பதிவுகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் 2016ஆம் ஆண்டு டிசம்பருக்கும் இடையில் 345 மில்லியன் பணத்தாள்களை மட்டுமே பெற்றுள்ளது என மற்றொரு ஆர்டிஐ பதிலில், நாசிக் கரன்சி நோட் பிரஸ் தெரிவித்துள்ளது. 2015-2016 நிதியாண்டு (ஏப்ரல் 2015-மார்ச் 2016,) ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது 210.000 மில்லியன் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
2016-17 நிதியாண்டில்...
பெங்களூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் (பி) லிமிடெட், ரிசர்வ் வங்கிக்கு 5,195.65 மில்லியன் 500 ரூபாய் பணத்தாள்களை வழங்கியது மற்றும் பேங்க் நோட் பிரஸ், தேவாஸ், 2016-2017இல் 1,953.000 மில்லியன் பணத்தாள்களை ரிசர்வ் வங்கிக்கு வழங்கியது. ஆனால் ரிசர்வ் வங்கிக்கு 7,260 மில்லியன் பணத்தாள்கள் மட்டுமே கிடைத்தது. இவை அனைத்தும் மூன்று அச்சகங்களில் இருந்தும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் பணத்தாள்கள் ஆகும். ஞ
மிஸ்ஸாகும் நோட்டுகள் எங்கே?
எனவே, மூன்று அச்சகங்களிலும் சேர்த்து அச்சிடப்ப்பட்ட 8810.65 மில்லியன் ரூபாய் நோட்டுகளில் இருந்து 7260 மில்லியன் பணத்தாள்கள் மட்டுமே ரிசர்வ் வங்கி பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனோரஞ்சன் ராய் இதுகுறித்து கூறுகையில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நோட்டுகள் காணாமல் போனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கக் கோரி மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ₹100 கள்ள நோட்டு இல்லையே... கண்டறிவது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ