தேர்தல் பத்திர நிதி விவகாரம்... 4 மாத கால அவகாசம் கேட்கும் எஸ்பிஐ
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பாக, சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதில் தேர்தல் பத்திர திட்டம் சட்டபூர்வமானது இல்லை என்று கூறி தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்ததோடு, தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் யார் எந்த கட்சிக்கு நிதி உதவி செய்தார்கள் என்பது குறித்த தகவல்களை, மார்ச் மாதம் ஆறாம் தேதிக்குள், தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை அழிக்க வேண்டும் என, பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) கோரிக்கை வைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதில், உள்ள நடைமுறை சிக்கல்கள், மற்றும் டி கோடிங் நடைமுறைகள் காரணமாக சிறிது கால அவகாசம் தேவை என்று, பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் அனைத்தும், பாரத ஸ்டேட் வங்கி மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தவும், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் அளிக்கப்பட்ட விவரங்களை, தேர்தல் ஆணையத்தின் தெரிவிக்க வேண்டும் என்றும், எஸ்பிஐ வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல், தற்போது வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும், பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வழங்கிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கருப்பு பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் அளிப்பது என்று கூறப்படுவதும், நன்கொடையாளர்களின் ரகசிய தன்மை பாதுகாப்பதும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்ற அமர்வு கூறியது. மேலும் இந்த திட்டம், தகவல் அறியும் உரிமைக்காக கூறி சர்ச்சைக்குரிய, இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் கூறியது. இந்திய தலைமை நீதிபதி டிவைச்சந்திரன் சூடு, தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது... திமுகவை அட்டாக் செய்த பிரதமர்!
தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்பட்ட உடனே, பண தரப்பினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர் கட்சியை சேர்ந்தவர்கள், பல தொண்டு நிறுவனங்கள் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன இதை எடுத்து உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சரான அருண் ஜெட்லி இந்த திட்டத்தை அறிமுகம் செய்து பேசுகையில், தற்போது தேர்தல் நிதி பெறும் அமைப்புகளில், அரசியல் கட்சிகளுக்கு இரண்டு நன்மைகள் வருகிறது என்பது தெரிவதில்லை என்றும், எனவே புதிய முறையை கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் 100% வெளிப்படை தன்மை இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | ஆபத்தான ஈனுலை திட்டம்...? திறந்துவைக்கும் பிரதமர் - முதல்வர் புறக்கணிப்பு ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ