பள்ளிகளில் முதலுதவி பாடம் கட்டாயமாக்க வேண்டும் - MV நாயுடு!
![பள்ளிகளில் முதலுதவி பாடம் கட்டாயமாக்க வேண்டும் - MV நாயுடு! பள்ளிகளில் முதலுதவி பாடம் கட்டாயமாக்க வேண்டும் - MV நாயுடு!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/12/05/138170-naidu234.jpg?itok=3Z-6IrQW)
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் துயரத்தின் போது மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்!
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் துயரத்தின் போது மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்!
விஜயவாடாவில் ஸ்வார்ணா பாரத் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட கார்டியோ புல்மோனரி மறுசீரமைப்பு (CPR) முகாமில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர் பொறுப்பான குடிமகனாக கல்வி கற்கும் மாணவர்களிடையே பாதுகாப்பு, சமத்துவம், இரக்க உணர்வு ஆகியவற்றை கற்பிப்பதற்காக ஆசிரிய சமூகம் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் 1,00,000-க்கு 4280 பேர் இடர்பாடுகளில் உயிர் இழக்கும் அதே வேலையுல் அமெரிக்காவில் 1,100,000-க்கு 60-151 என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் தற்காப்பு கல்வி இதற்கு பெரும் கருவியாய் அமைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பள்ளிகளில் CPR பயிற்சி (அ) முதலுதவி கல்வி கட்டாயமாக்கப்படுவதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் பொதுமக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பது அதிகமாகி வருகின்றது எனவும் வருத்தம் தெரிவித்தார். நவீன வாழ்வு, உடல்ரீதியான செயல்பாடு, மரபியல் முன்கணிப்பு, வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவை இந்தியர்களின் இதய நோய்க்கு காரணமாய் அமைகின்றது, குறிப்பாக இளம் வயதினரை அதிகம் பாதிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்திய நர்சிங் கவுன்சில் (IRC)-ன், இந்திய சமூகத்தின் அனஸ்தீசியாலஜிஸ்டுகளின் முன்முயற்சியைப் குறித்து பாராட்டி பேசினார்.
அவர் வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கம் (TANA) மற்றும் இந்திய தோற்றத்துக்கான அமெரிக்கன் அசோசியேசன் ஆஃப் அசோசியேசன் (AAPI) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இப்பயிற்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதை குறிப்பிட்டும் பாராட்டி பேசினார்.