நிர்மலா சீத்தாராமன்மணிக்கு 2100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போர் விமானத்தில் பறந்த முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கோய்-30 போர் விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்பயணம் செய்தார். இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.


இந்திய விமானப்படையில் அதிநவீன சுக்கோய்-30 ஜெட் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மணிக்கு சுமார் 2100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து எதிரிகளின் இலக்குகளை குண்டுவீசி தாக்கி அழிக்கும் சுகோய் விமானங்கள் ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.


இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று சுக்கோய்-30  போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறனை அறிந்து கொண்டார்.