நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நடைபெற்ற நீட் தேர்வு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பல்வேறு நகரங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம், நண்பகல் பணிரன்டு மணி முதலே சோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 


சோதனையின் போது தாங்கள் அணிந்து வந்த அணிகலன்களை மாணவிகள் அகற்றிய பின்னரே,  தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு இல்லாமல் வந்த மாணவர்களும், காலதாமதமாக வந்த மாணவர்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.


போனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 


நாடு முழுவதும் சுமார் 15.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.


மேலும் இயற்பியல் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும்., மாநில பாடத் திட்டத்தில் இருந்து குறைவாகவே வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.