நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் ‘நீட்’ நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.


நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் அது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும், இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 


இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


ஆனால் தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க இயலாது என்றும், தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தில் ஆலோசனை நடத்துவதாகவும் அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.