நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே மாதம் 7-ம் தேதி மருத்துவ பாடங்களுக்கான நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை. ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு வினாத்தாளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன. எனவே நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். அதேபோல நடந்து முடிந்த நீட் தேர்வை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.


இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் மற்றும் மருத்துவ கவுன்சில் தலைவர் ஜூன் 7-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.