ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடக்காது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார். தற்போது தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.


இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அளித்துள்ள பதிலில், 


2019 ம் ஆண்டு நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் 2019ம் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை எனவும் 2019 ம் ஆண்டில் குறைந்தபட்சம் ஆஃப்லைன் முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.