மே 6 நீட் தேர்வு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக் மார்ச் 9 கடைசி நாள்!
நீட் தேர்வு மே மாதம் 6 நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்ச்சி தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம்.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ் இ அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது.
நீட் தேர்வு மே மாதம் 6 நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்ச்சி தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது.
இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க www.cbs-e-n-eet.nic.in. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 9 கடைசி நாள்.