கொரோனா எதிரொலி: மே - 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது... மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நுழைவுத்தேர்வான NEET தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தோற்றால் இந்தியாவில் 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 3 நாட்கள் ஆகிறது.


இந்நிலையில், தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை (NEET) 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தீவிரமாக ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறனர். நாடு முழுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு விருமுறை அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு மறு தேதி அறிவிக்கப்படவில்லை.


"பெற்றோர்களும் மாணவர்களும் வெவ்வேறு தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், அவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, நீட் (UG) 2020 மற்றும் JEE (மெயின்) ஆகியவற்றை மே கடைசி வாரம் வரை ஒத்திவைக்குமாறு தேசிய சோதனை நிறுவனமான @DG_NTA-க்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்வீட் செய்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் வெடித்ததால் திட்டமிடப்பட்டபடி நீட் 2020 இன் அட்மிட் கார்டு இன்று வெளியிடப்படாது என்று என்.டி.ஏ விசாரணை மேசையில் ஒரு அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.


நீட் 2020 தேர்வு 2020 மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் பரவியுள்ள பல்வேறு மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முடிவு 2020 ஜூன் 4 அன்று அறிவிக்க திட்டமிடப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் UG மருத்துவ மற்றும் பல் படிப்புகளில் சேருவதற்காக நீட் 2020 தேர்வு நடத்தப்படுகிறது.