நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஜப்பானிய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையானது இன்று பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த விசாரணை அறிக்கையில் கூறியது:-  1945-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ம் தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடந்த விமான விபத்து ஒன்றில் உயிரிழந்து விட்டார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஏற்கனவே கூறப்பட்டு வந்தபடியே விமான விபத்தில் பலியானது உண்மைதான் என்றும், அவரது உடல் தைவானில் தகனம் செய்யப்பட்டது என்றும் தெரியவந்தது. நேதாஜி உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டது. நேதாஜியின் பற்றிய தகன ஆவணங்கள், 1956-ம் ஆண்டு இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தின் எண்.எப்.சி. 1852/6 கோப்பில் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஜப்பான் அரசின் விசாரணை அறிக்கையில் விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


அவருடைய மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய 3 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அதில் 2 விசாரணைக் கமிஷன்கள் நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மைதான் என்று தெரிவித்தன. 3-வது விசாரணைக் கமிஷன் விமான விபத்துக்கு பின்பும் நேதாஜி உயிருடன் இருந்தார் என்று கூறியது. எனவே நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடித்து வந்தது. நேதாஜி குடும்பத்தினர் இடையேயும் இதில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது என்பது குறிபிடத்தக்கது.