மகேந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். ஊக்கம் அளிக்கும் வகையில் இவர் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பிரபாலனவை. இதனால், தொடர்ந்து, ஊடகங்களிலும் இவரது பெயர் இடம்பெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் பணக்காரர்கள் பட்டியில் 91ஆவது இடத்தில் இருக்கும் ஆனந்த் மஹிந்திராவின் சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, கடந்த நவ. 29ஆம் தேதி ஃபோர்ப்ஸ் இந்திய பத்திரிகை, இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2022இல் உறுதிசெய்தியுள்ளது. இந்நிலையில், அவரிடம் ட்விட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஆனந்த் மஹிந்திரா அளித்த பதில் அனைவரின் மனதையும் கவர்ந்து, வழக்கம்போல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | 'மோடியை கொல்ல தயாரா இருங்க...' காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் பூகம்பம்!



அதாவது,"இந்தியாவின் பணக்காரர்கள் தரவரிசையில் 73ஆவது இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். எப்போது முதலிடத்தை பிடிப்பீர்கள்?" என ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா அளித்த பதில்,"நான் ஒருபோதும் முதல் பணக்காரராக ஆக மாட்டேன் என்பதே உண்மை. ஏனென்றால், அது என் விருப்பம் இல்லை" என்று பதில் அளித்தார். 


அவரது இந்த பதில் இணையத்தில் பலரின் இதயங்களையும் வென்றுள்ளது. தொடர்ந்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரின் பதிலுக்கு ஒரு ட்விட்டர் பயனர், "சிறந்த ஆளுமைகள் எப்போதும் நம் நாடு குறித்தும், அதற்கு அவர்களான பங்களிப்பு குறித்துமே எண்ணுவார்கள். நாங்கள் என்றும் ரத்தன் டாட்டாவையும், உங்களையும் இதற்காகவே நினைவில் வைத்திருப்போம்" என பதிவிட்டிருந்தார்.  


மற்றொரு பயனர்,"பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் யாரும் அந்த இடத்திற்கு வரவேண்டும் என நினைத்தவர்கள் இல்லை. அதுபோன்ற குறுகிய எண்ணத்தை தாணடியவர்கள். அவர்களின் சிறந்த திறன் மூலம் வணிகத்தை விரிவுப்படுத்தியே, இதுபோன்ற மைல்கல்லை எட்டுகின்றனர். எனவே, நீங்கள் முதல் பணக்காரர் ஆக வேண்டும் என எண்ணாவிட்டாலும், அந்த இடத்திற்கு நிச்சயம் முன்னேற்றுவீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கவில்லை! ஏமாறவேண்டாம்: எச்சரிக்கும் அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ