இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய அறிவுரை!!
அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமானங்களில் ஆங்கில மற்றும் ஹிந்தி பத்திரிகைகளை சமமான எண்ணிக்கையில் கொண்டுசெல்ல வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், விமான நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வாசிப்புப் பொருள் பயணிகளுக்கு வழங்கப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமானங்களில் ஆங்கில மற்றும் ஹிந்தி பத்திரிகைகளை சமமான எண்ணிக்கையில் கொண்டுசெல்ல வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், விமான நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வாசிப்புப் பொருள் பயணிகளுக்கு வழங்கப்படுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.ஜி.சி.ஏ.வின் கூட்டுப் பணிப்பாளர் நாயகம் லலித் குப்தா கூறுகையில்:-
"இது இந்திய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழி கொள்கைக்கு எதிரானது. விமானம் சமமான எண்ணிக்கையிலான ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிகைகளை எடுத்துச்செல்லுங்கள் "என்று அவர் அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் தெரிவித்தார்.
இந்த ஆலோசனையை விமர்சித்து, காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ட்விட்டர் பக்கத்தில் "டி.ஜி.சி.ஏ. இப்போது இந்திப் பிரசுரங்களை இந்திய விமானங்களில் (சைவ உணவுகளுடன் சேர்ந்து) விநியோகிக்க விரும்புகிறது!" பதிவிட்டுருகிறார்.